கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு 2வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர் நேரத்தில் நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேரூதவியாக இருக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் 6 வரை நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நன்கொடையாக ரூ.79.74 கோடி பெறப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தகவல் அளித்துள்ளனர்.
இதுவரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும், டிடிவி தினகரன் ரூ. 1 கோடி, தமிழக ஆளுநர் ரூ. 1 கோடியும் அளித்துள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.