அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு 10 லட்சம் டாலர்களை நிதி உதவியாக பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சினா அளித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த வாரம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. உலக நாடுகளும் இதற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது தான்.
அவருக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் களத்தில் நின்று நிறவெறிக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், இவர்களுக்கு பல சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும், உலக நாடுகளில் உள்ள பிரபலங்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் சினா 10 லட்சம் டாலர்களை நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.
இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 7.58 கோடி ஆகும். மேலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தனது ரசிகர்களும் இதற்கு உதவுமாறு அவர் தெரிவித்துள்ளார். அவருடைய ரசிகர்கள் தற்போது அவர் போட்டியில் பயன்படுத்தும் வார்த்தைகளான கடின உழைப்பு, நேர்மை, மரியாதை உள்ளிட்ட வார்த்தைகளை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.