இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண் விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு நோய் காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் சிகிச்சைபலனின்றி சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். பின்னர் இவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அவரது உடலைக் குளிப்பாட்டி உள்ளனர். அப்போது அந்த சிறுமி திடீரென்று கண் விழித்து இதயத்துடிப்பும் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் இதுபோன்ற சம்பவங்கள் ஹைபர்களேமியாவால் நிகழ்கிறது. அதாவது ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என தெரியவந்துள்ளது. இறுதி சடங்கின் போது சிறுமி கண்விழித்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.