பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும்போதே தன் சொந்த செலவில் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவில் டொமினிக்கன் குடியரசில் இருக்கும் Santiago என்ற நகரத்தை சேர்ந்தவர் Mayra Alonzo (55). இவருக்கு ஒரு விபரீத ஆசை இருந்துள்ளது. அதாவது தன் மறைவுக்கு பின், தன் உறவினர்கள் எவ்வாறு அழுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். எனவே இதற்காக அவரே 710 டொலர்கள் செலவு செய்து இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி சவப்பெட்டியில் அவரை வைத்து, மூக்கில் பஞ்சு மற்றும் வெள்ளை நிற உடை உடுத்தி இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்திருக்கிறது. அப்போது அவரது உறவினர்களும் அவர் மரணமடைந்தால் எப்படி அழுவார்களோ அதேபோல் கண்ணீர் விட்டு கதறி அழுது நடித்திருக்கிறார்கள்.
அவர் சவப்பெட்டியில் அதிக நேரம் இருந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “எனது ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. நான் இப்படி ஆசைப்பட கொரோனா தான் காரணம். இதனால் பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் போது அதனை நான் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால்தான் இவ்வாறு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.