Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் கூடுதலாக ஒதுக்கீடு.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சைத் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகமாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 7.9 லட்சம் மருந்துகள் நாடு முழுக்க இருக்கும் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |