Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல… மாறுபடும் சீதோஷ்ன நிலை… கோரிக்கை விடுத்த மீனவர்கள்.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்திலுள்ள கடலில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கு கடலில் எப்போதும் இல்லாத வகையில் திடீரென கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்தில் சீறி எழும்பியுள்ளது. மேலும் ராட்சத அலைகள் கரை பகுதி வரை 20 அடி தூரத்துக்கு உட்புகுந்துள்ளது. இதனால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் படகுகளை வீட்டில் கட்டிடங்களில் கட்டி பாதுகாத்துள்ளனர்.

இதுக்குறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறும்போது கடலில் ஏற்படும் பருவ மாற்றங்களை கணிக்க முடியாததால் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர் பகுதி மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவதால் கடல் சீற்றம் ஏற்படாத வகையில் தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |