Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்க பிள்ளைகளோட…. எதிர்காலம் நல்லா இருக்கணுமா…? அப்ப இத சொல்லிக்கொடுங்க….!!

குழந்தைகளிடம் தோல்வி குறித்த மன பக்குவத்தை வளர்ப்பது எப்படி என்பது  குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தற்போது உள்ள குழந்தைகள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியை தாங்கக்கூடிய சக்தி என்பது பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். எதை எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற எண்ணங்கள் இன்றைய குழந்தைகளில் பலரிடம் காணமுடிகிறது.

ஆகையால் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வெற்றிக் கதைகளை மற்றும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காமல் தோல்வியிலிருந்து வெற்றி பெற்றவர்களின் கதையை சொல்லித்தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தோல்வி குறித்த மனப்பக்குவம் , எந்த பிரச்சனையானாலும் எதிர்கொள்ள வேண்டும் என்ற மன தைரியம் அவர்களுக்கு கிடைக்கும். தோல்வி குறித்த புரிதல், உடல் உழைப்பு , முயற்சி இவற்றை குழந்தைகளுக்கு புரிய வைத்து விட்டாலே அவர்களது எதிர்காலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Categories

Tech |