Categories
டெக்னாலஜி பல்சுவை

“எதிர்காலத்தை ஆளப்போகும் டெக்னாலஜிகள் இவைதான்”… என்னென்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

எதிர்காலத்தில் நம் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகளை பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

நமது தேவை மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை, அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் ஏ.ஐ. உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் நிறுவனம் அடுத்த அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது.

2. விரிச்சுவல் ரியாலிட்டி:

கற்பனை உலகிற்கு நம்மைக் கொண்டு  செல்லும் தொழில்நுட்பம் விரிச்சுவல் ரியாலிட்டி. தற்போது விரிச்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி  பல கேம்ஸ்கள் வெளி வருகிறது. சில செல்போன்  நிறுவனம்  விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், தங்கள் சாதனத்தில் புகுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

3. சாட்பாட்

‘சாட்’ என்பது மெசெஞ்சர், கூகுள் ஹேங் அவுட், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் பேசிக்கொள்வதைத்தான். மீதம் இருக்கும் ‘பாட்’ எனும் சொல் ரோபாட்டிலிருந்து எடுக்கப்பட்டு மொத்தமாகச் ‘சாட் பாட்’ எனும் சொல் உருவாக்கப்பட்டது.  இந்தச் சாட் பாட்டானது, நமது தேவை களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு நமக்குப் பதிலளிக்கும்.

4. இன்டலிஜென்ட் வெர்பல் இண்டர்பேஸ்

இந்த டெக்னாலஜி தற்போது  ஸ்மார்ட்போனில் பலர்  பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். கீபோர்டு, மவுஸ் ஆகியவற்றின் உதவி இல்லாமல் நாம் பேசும் வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொண்டு நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தொழில்நுட்பம். இதைப் போன்று பல பர்சனல் அசிஸ்டெண்ட்களில் இத்தொழில்நுட்பம் இருக்கின்றன. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எத்தகைய வீரீயம் பெறும் என்பதற்கு இந்த டேட்டாவே போதும்.

5. ட்ரோன் டெலிவரி

நமது தேவைகளையோ அல்லது நமக்குத் தேவையான பொருட்களையோ ஆட்கள் உதவி இல்லாமல், ட்ரோன் மூலம் பூர்த்திச் செய்து கொள்ளும் தொழில்நுட்பம்தான் ட்ரோன் டெலிவரி. எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்கு மிக உபயோகமானதாக இருக்கும்.  எதிர்காலத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தைத்தான் பின்பற்றும்.

Categories

Tech |