இன்றைய காலகட்டத்தில் பலரும் ஜிமெயில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கு தகவல்களை அனுப்ப மற்றும் பெறுவதற்கு சில முக்கிய கோப்புகளை பாதுகாக்க ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையிலும் பயன்படுத்தப்படும் ஜிமெயிலில் பயனர்களின் வசதிக்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றது. வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமல் இமெயில்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிமெயில் ஸ்டோரேஜ் 15 ஜிபி-லிருந்து 1TB ஆக உயர்த்தப்பட்டது.
இதனைத் தவிர்த்து புதிய அப்டேட்டும் தற்போது வெளியாக்கியுள்ளது. அதாவது அனைத்து செயலிகளிலும் ஜிமெயில் முகவரி கொடுத்து தான் நாம் லாகின் செய்வோம். அதனால் நிறைய மெயில்கள் நமக்கு அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக un subscribe tag பயன்படுத்தி தேவையில்லாத மெயில் டேப்பை நாம் டெலிட் செய்யலாம். அது மட்டுமல்லாமல் தவறுதலாக அனுப்பிய மெயிலை Undo விதியை பயன்படுத்தி எடிட் செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக மெயில் செய்ய விரும்பினால் confidential email என்ற ஆப்ஷனை ENABLE செய்து வைத்துக் கொள்ள முடியும். அதேசமயம் schedule send என்ற ஆப்ஷனை பயன்படுத்தி விரும்பிய நேரத்தில் இமெயிலை அனுப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது.