சென்னை விமான நிலையத்தில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுவது ஒரு போதும் ஏற்கக்கூடியது அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டும். அது பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நாங்குநேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பரப்புரை தொடங்க உள்ளது. தமிழ்நாடு அரசினுடைய நலத்திட்டங்கள் நகரம் முதல் கிராமங்கள் வரை மக்களுக்குச் சென்று அடைகின்ற இந்த சூழலில் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது’ என்று அவர் கூறினார்.