Categories
உலக செய்திகள்

G20 உச்சிமாநாடு…. ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைன் மீதான தாக்குதலை புதின் தொடருவதால், நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 176 நாளாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் மீதான கொடூரமான தாக்குதலை புதின் ராணுவம் தொடர்ந்து வருவதால் இந்தோனேசியா தலைநகரம் பாலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள G20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை என பிரித்தானியாவின் செய்தி தொடர்பாளர் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.  இந்த கருத்து, பிரித்தானியாவின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை G20 உச்சிமாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்ற அறிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

இது குறித்து ரிஷி சுனக்  கூறியதாவது, “எங்கள் G20 கூட்டாளிகள் புதினின் அருவருப்பான நடத்தையை வெளியேற்றும் கூட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மேலும் தூங்கும் போது குழந்தைகள் படுக்கையிலேயே கொல்லப்படுவதற்கு புதின் பொறுப்பாக இருக்கும் போது அவருடன் ஒரு மேஜையில் உட்கார்ந்து கொள்வது கடினம்” என்று அவர்  தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புதினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பாலி மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இருவரும் செப்டம்பர் மாதம் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |