இந்தியாவிடம் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்பதால் உலக அளவில் நம் நாட்டின் மீதான புரிதலை மேம்படுத்துவது மிக முக்கியமானது ஆகும்.
அதன் பிறகு அகிம்சை, அமைதி, நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சம நீதி ஆகிய உயர் கருத்துகளை முக்கியத்துவமாகக் கொண்டு இந்த வாய்ப்பை பிரதமர் மோடி நன்றாக பயன்படுத்திக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். ஜி20 தலைமை பொறுப்பை ஏற்று தொடர்ந்து நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு பொறுப்பளிக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன். உலக அளவில் இந்தியா கொடுத்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கும் தமிழகம் முழு ஒத்துழைப்பு தரும். மேலும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று கூறினார்.