கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்து பரவச படுவீர்கள். கடன் சுமை குறைவதற்கு நண்பர்கள் வழிவகுத்து கொடுப்பார்கள். இன்று எடுத்த வேலைகளை மிக சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி, மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக சம்பவங்கள் நடக்கும்.
உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகளும் வந்துசேரும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உருவாகும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஒத்துழைப்பு இருக்கும்.சக மாணவர்களிடம் மட்டும் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.