Categories
உலக செய்திகள்

கிலோ ரூ20 தான்…. 1 நாளைக்கு ரூ1,500 லாபம்…. களைகட்டும் வெட்டுக்கிளி வியாபாரம்….!!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் படையெடுக்க ஆரம்பித்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது. அந்த வகையில், வட மாநிலத்தில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பயிர்களும் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர். இதேபோல், பாகிஸ்தானிலும் 25 சதவீதத்திற்கும் மேல் பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதப்படுத்தியுள்ளன.

இது ஒருபுறம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வேதனை அளித்தாலும், இந்த நஷ்டத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகளை பிடித்து லாபம் பார்க்க நினைத்த விவசாயிகள் வெட்டிகிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விற்பனை செய்து வருகின்றனர். அதனை வாங்கிச் செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் வளரும் கோழிகளுக்கு தீவனமாக இந்த வெட்டுக்கிளிகளை போட்டு வருகின்றனர். பயிர்களில் சேதத்தை ஏற்படுத்திய வெட்டிக்கிளி மூலமாகவே நாளொன்றுக்கு பாகிஸ்தான் விவசாயிகள் ரூ1,500க்கு மேல் லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |