ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் காவேரிபட்டினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் கிரி, கோபி, வேலயப்பன் போன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விட்டனர்.
இதனை தொடர்ந்து வெளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த கெலமங்கலம் போலீசார் அங்குள்ள பெரிய புளிய மரத்தினடியில் சிலர் சூதாடி கொண்டு இருந்ததை கண்டனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் நாராயணப்பா, செல்வராஜ், முனிராஜ் போன்றோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.