பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராகேஷ் குமார், ராம், சுவில்குமார், வினோத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலைத்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 64,330 பறிமுதல் செய்துள்ளனர்.