பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தென்னிலை பகுதியில் முல்லை நகரில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகம், சிவக்குமார், ஆனந்த், குமார், ராஜேந்திரன், சாந்தகுமார், சண்முகம், பிரகாஷ், ரமேஷ் ஆகிய ஒன்பது பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.