புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பலை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அப்பகுதியை சேர்ந்த வீரப்பன், முருகேசன், சுப்பிரமணி, சுப்பையா, ராஜ்குமார், முத்துக்குமாரசாமி, மலைச்சாமி மற்றும் சாமிதுரை ஆகிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபாய், 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.