Categories
மாநில செய்திகள்

கேரளா முன்னாள் ஆளுநர் வீட்டில் சூதாட்டம்… 28 பேர் கைது.. !!

கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவத்திற்கு சொந்தமான வீடு ஒன்றில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்துக்கு சொந்தமான வீடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இந்த வீட்டை, பிரபு என்ற பிரபாகரன் என்பவர் தற்போது குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், இங்கு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்த நிலையில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனை மேற்கொண்டு பார்த்தபோது அங்கு சூதாட்டம் நடப்பது உறுதியானது. மேலும், அங்கிருந்த 28 பேரை போலீசார் கைது செய்து, 9.52 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சூதாட்ட வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |