Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தப்பு செய்த வாலிபர்கள்…. ஏரிக்கரையில் நடந்த சம்பவம்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் பகுதியில் கெலமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ், ராஜ், மல்லேஷ், ஹரிஷ் குமார் என்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |