Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு… திருமண விழாவை புரட்டிப்போட்ட யானை… அதிர்ச்சி சம்பவம்…!!!

நம் இந்தியாவில் திருமணங்களை பலரும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். விதவிதமான மேடை அலங்காரங்கள், போட்டோஷூட் என்ற பெயரில் திருமணத்தை திருவிழாவைப் போல நடத்துகின்றனர். ஆனால் தற்போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால், குறைந்த அளவு உறவினர்களோடு திருமணத்தை நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் சிலர் ஆடம்பரமாக திருமணங்களை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு திருமணம் விபரீதமான சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.

உத்திரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், யானை மீது மணமக்களை ஊர்வலமாக தெருக்களில் அழைத்து வந்துள்ளனர். அப்படி வரும்பொழுது உறவினர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளன. அந்த சத்தத்தால் யானை நிதானத்தை இழந்து முரட்டுத்தனமாக நடக்கத் தொடங்கியது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த மணமக்கள் கீழே விழுந்தனர். மேலும் யானை அங்கிருந்த வாகனங்களையும், பொருள்களையும் சேதப்படுத்தியது. இதனால் மணமக்களும் அவரது உறவினர்களும் அங்கிருந்து தெறித்து ஓட ஆரம்பித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |