தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா என்பது பலராலும் கவனிக்கப்படாத ஒரு திரை உலகமாகவே இருந்தது. ஆனால் கேஜிஎஃப் பட ரிலீசுக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான காந்தாரா திரைப்படமும் தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்த படம் தென்னிந்திய சினிமாவில் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் 170 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் கர்நாடகாவில் 160 கோடி வசூலித்த நிலையில், இந்த சாதனையை தற்போது காந்தாரா முறியடித்துள்ளது. மேலும் மற்ற தென்னிந்திய மொழி படங்களை விட கேஜிஎஃப் மற்றும் காந்தாரா திரைப்படங்கள் குறைந்த பொருட்செலவில் இயக்கப்பட்டு, அதிக லாபம் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.