Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காந்தி மார்க்கெட்” களைகட்டும் கஞ்சா விற்பனை…. நடவடிக்கை எடுக்க கோரி பாமக மனு….!!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  

திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி துறை வாரியன அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பு மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், திருச்சியின் புகழ்பெற்ற காந்தி மார்க்கெட்டில் வாழைமண்டி,  பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும்,

அதனை தடுக்காவிட்டால் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை சீரழிய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த விற்பனைக்கு பின்னால் இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரிவாக விசாரணை நடத்தக்கோரி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

Categories

Tech |