Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…. மூடப்பட்ட காந்தி பார்க்… மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவு…!!

கோவை காந்தி பார்க் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு மண்டலம் 24வது வார்டு பகுதியில் காந்தி பார்க் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காந்தி பார்க் மூடப்பட்டது.

அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த காந்தி பார்க் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மறு உத்தரவு வரும்வரை காந்தி பார்க் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |