Categories
தேசிய செய்திகள்

காந்தி சிலை சேதம்…. உடைத்தது இவர்கள் தான்…? – பெரும் பரபரப்பு…!!

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒரு குழுவினர்  காந்தி சிலையை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது டிராக்டர் நடந்தபோது விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பை மீறி நுழைந்ததாக காவல்துறையினர் விவசாயிகளின் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கூடிய ஒரு குழுவினர் காந்தியடிகளின் சிலையை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால்  சம்பவத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தொடர்பிருப்பதாக இந்திய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

Categories

Tech |