Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அ.ம.மு.க சார்பில் மரியாதை…!!

மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும்  அ.ம.மு.க.  சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கும் அதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கும் மாவட்ட கழக செயலாளர் திரு கே.கே. சிவசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு தர்மராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் கழக அமைப்புச் செயலாளர் திரு ஹென்றி தாமஸ் தலைமையில் கழகத்தினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் திருமதி சுகந்தி கோமஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைப்போன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகம் சார்பில் திருச்செந்தூரில் உள்ள காந்தி மற்றும் காமராஜரின் சிலைகளுக்கு மாவட்ட கழக செயலாளர் திரு பி.ஆர். மனோகரன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கும், ராஜா திரையரங்கம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் மாநில கழக செயலாளர், வழக்கறிஞர் வேல்முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |