மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.
நாட்டு விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றவர் மகாத்மாகாந்தி. ஆனால் விதியின் விளையாட்டால் விடுதலை கிடைத்த 6 மாதங்களிலேயே மகாத்மா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது 74வது நினைவு தினத்தை முன்னிட்டு பல இடங்களில் அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மலரஞ்சலி செலுத்தினார்.