Categories
தேசிய செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்”… மும்பை – கொங்கன் சிறப்பு ரயில்… மேற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தியில், “விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மும்பை – கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் மும்பை சென்ட்ரல்-சாவந்த்வாடி, பாந்த்ரா-சாவந்த்வாடி, பாத்ரா-குடால் போன்ற வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு கணபதி சிறப்பு ரயில்களை இயக்க தயாராக இருந்த போதிலும் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை” என இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், மும்பை -சாவந்த்வாடி , லோக்மான்யதிலக் -குடால் , ரத்னகரி- சாவந்த்வாடி போன்ற பகுதிகளுக்கு வருகின்ற 15ஆம் தேதி முதல் செப்.5ஆம் தேதி வரையில் சிறப்புரயில்கள் இயக்கப்பட உள்ளது. பயணத்தின் போது பயணிகள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று  முதல் துவங்குகிறது, எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |