சாத்தான்குளம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பாலகுருசாமி கோவிலில் விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 3 முதல் 13 அடி வரை உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு புதிதாக குபேர விநாயகர், சிவன் ருத்ரதாண்டவம், அகத்தியர் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விடும் காட்சிகள் போன்றவற்றை மிகவும் தத்துரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில காலங்களில் முழுமையாக முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.