Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மெதுவாக போக சொன்னது குத்தமாடா….? கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்…. 11 பேர் அதிரடி கைது….!!

சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் காரில் வந்தவர்கள் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் காரில் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு வந்து கட்டை வேல்கம்பு ஆகிய ஆயுதங்களோடு சம்பவ இடத்திற்கு வந்து இறங்கி அங்கே நின்று கொண்டிருந்த கணேசன் என்பவரையும், அவருடன் இருந்தவர்களையும் ஆபாசமாக பேசி தாக்கினர்.

பின்னர் அங்கிருந்த கடைகள், வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் காயமடைந்தவர்களிடம் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சாக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த கணேசன் உட்பட ஆறு பேரை காரைக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சச்சரவில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |