அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்தவர் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயணன். இவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 21 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், நான் வேலை தேடிக்கொண்டு இருந்தபோது ஜிதேந்திர நாராயணனை சந்தித்தேன். அப்போது எனக்கு அரசு பணி வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்ததோடு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரிஷி என்பவருடன் தொடர்பில் இருக்குமாறு கூறினார். அதன் பிறகு 2 பேரும் சேர்ந்து என்னை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து வெளியில் சொன்னால் என்னுடைய குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என்றும் ஜிதேந்திர நாராயணன் மிரட்டினார். கடந்த மே மாதம் 1-ம் தேதி அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெல்லியில் உள்ள ஜிதேந்திர நாராயணன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு சிறப்பு புலனாய்வு குழுவினரும் அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஜிதேந்திர நாராயணன் மனு கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகிய போது சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் கூறினர். இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து ஜிதேந்திர நாராயணனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கைக்கு பிறகு ஜிஜேந்திர நாராயணன் என்னை சதிவேலையில் சிக்க வைத்து விட்டதாக ஆவேசத்துடன் பேட்டியில் கூறியுள்ளார்.