Categories
தேசிய செய்திகள்

கங்கையில் மிதக்கும் சடலங்கள்… “கண்களை திறந்து பாருங்கள் பிரதமர் மோடி”… ராகுல் காந்தி டிவிட்..!!

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து செல்வதை கண்டித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக கங்கையாற்றில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

இதை கண்டித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் ஆறுகளில் எண்ணற்ற உடல்கள் அடித்து செல்லப்படுகிறது. மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு செல்லப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடி இளஞ்சிவப்பு நிற கண்ணாடியை கழட்டி வைத்து சென்ட்ரல் விஸ்டா தவிர மற்ற காட்சிகளும் அவர் கண்களுக்கு தெரியட்டும் என்று மோடி அரசை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |