Categories
தேசிய செய்திகள்

கங்கை நதிக்கரையில்…. புதைக்கப்பட்டிருக்கும் சடலங்கள்…. விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து பல பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பிஹார் மாநிலத்தில் கங்கை நதிக்கரை ஓரத்தில் பிணங்கள் மிதந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சடலங்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்து வருகின்றது என பீகார் அரசு தெரிவித்தது. மொத்தம் 71 சடலங்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதி அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பெரும்பாலான சடலங்கள் காவி உடையில் மூடப்பட்டதாக கூறுகின்றனர். அந்த சடலங்கள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. விரகு கட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தகனம் செய்யாமல் சிலர் புதைத்து விடுகின்றனர் எனவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |