அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத்தலைவர் கவிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
அதில் அகில இந்திய வானொலி நிலையத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும், வானொலியில் அஞ்சல் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வட்டார நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ரயில்வே கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.