Categories
கிரிக்கெட் விளையாட்டு

கங்குலி, தோனி இருவரில் யார் பெஸ்ட் ….? முன்னாள் வீரர் ஷேவாக் பதில் ….!!!

இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பதிலளித்துள்ளார் .

இந்திய அணி கேப்டன்கள் வரிசையில் கங்குலி ,எம்.எஸ்.தோனி இருவரும் சிறந்த  கேப்டன்களாக கருதப்படுபவர்கள் . இருவரும் இந்திய அணிக்கு புத்துயிர் அளித்துள்ளனர் . இதில் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது .மேலும் ஆஸ்திரேலியாவுடனான தொடரையும் சமன் செய்தது .அதோடு 2002 இங்கிலாந்தில்  நாட்வெஸ்ட்  கோப்பையை கைப்பற்றியது. இதில் 2003-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது .இதையடுத்து எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 2007-ல்  டி20 தொடரையும் ,2011-ல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது .

அத்துடன் ஐசிசி சாம்பியன் டிராபி 2013 -ம் ஆண்டு வென்றது .மேலும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கேப்டன் தோனி நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வந்தார். இதில் கங்குலி ,தோனி ஆகிய இருவரின் தலைமையில் பல வீரர்கள் விளையாடி உள்ளனர் அவர்களின் முக்கியமான வீரராக கருதப்படுபவர் சேவாக். இந்திய அணியின் தொடக்க வீரரான இவர் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பதில் அளித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில் :’ இருவருமே சிறந்த கேப்டன் தான் .ஆனால் கங்குலியை நான் சிறந்த கேப்டனாக நினைக்கிறேன் .ஏனெனில் அவர் புதியதாக ஒரு அணியை உருவாக்கினார் மேலும் நம்பிக்கைக்குரிய வீரர்களை தேர்வு செய்து அணியை மீண்டும் கட்டமைத்தார்.

அத்துடன் இந்திய அணி வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று அவர் கற்றுக் கொடுத்தார் .இதில் கேப்டன் கங்குலி அணியில் இள மற்றும் திறமையான அணியை  ஒன்று சேர்த்தார். .இதில் கங்குலி விட்டுச்சென்ற பொறுப்பை தோனி சிறப்பாக தொடர்ந்தார் .மேலும் கங்குலி கட்டமைத்த அணியை தோனி சிறப்பாக மேம்படுத்தினார் .இதனால் இருவருமே சிறந்த கேப்டன்கள் தான். ஆனால் என்னுடைய கருத்து படி கங்குலி  தான் சிறந்த கேப்டன்’, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |