கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது.
இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி கேப்டன் கோலி மீதும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் பல்வேறு விமர்சனங்களை இந்திய ரசிகர்கள் எழுப்பி வந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
அந்த வகையில் மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிகாலம் முடிவதால் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வருகிறது. இதற்காக வருகின்ற 30-ம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளித்துள்ளது. இதில் கங்குலியும் விரேந்தர் சேவாக் பயிற்சியாளராக வேண்டும் என்று பல்வேறு தரப்பு ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும், இவர்கள் இருவரும் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது.
காரணம் அதற்கு பிசிசிஐ கொண்டுவந்து அதிரடி விதிதான். இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றால் அவர் 30 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டு உள்ளூர் அணிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும். இந்த இரண்டு தகுதி இருந்தால் தான் பயிற்சியாளராக முடியும். கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள நிறைய தவிர எந்த அணிக்கும் இதுவரை பயிற்சியாளராக இருக்கவில்லை எனவே அவர்கள் வந்து பயிற்சியாளராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.