Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…!!!

வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ்  அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 ரன்கள் குவித்துள்ளார்.

Image result for ganguly praises kohli

தற்போது விராட் கோஹ்லி 238 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16,406 ரன்கள் குவித்து அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய அணி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி ஒரு மாஸ்டர் கிளாஸ் வீரர் என்றும்..என்ன ஒரு வீரர்.!!! என்று வியந்து பாராட்டியுள்ளார்.

Categories

Tech |