உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும். 10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டில் , இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளில் கோப்பையை வெல்லலாம். இந்திய அணி எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறும் வகையில் மிக வலிமையுடன் இருக்கின்றது. எளிதில் வீழ்த்த கூடிய அணிகள் என்று எதுவும் கிடையாது. இந்திய அரையிறுதி போட்டி விளையாடும் என்று கங்குலி தெரிவித்தார்.