சொகுசு காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த காருக்குள் பொட்டலம் பொட்டலமாக 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் உறையூரில் வசிக்கும் ஆனந்தன், கோவிந்தராஜ் மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் 3 பேரையும் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் கடத்திய 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர்.