மருத்துவமனைக்கு அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள மருத்துவமனைக்கு அரசு கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் கண்டுள்ளனர்.
உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வலையன்குளத்தை சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.