கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீரத்துரை காவல்துறையினர் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் முத்து இருளாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை கண்டதும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 3 கத்திகள், 45 மது பாட்டில்கள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் சுப்ரமணியபுரம் காவல்துறையினர் பைக்காரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிருத்திவிராஜ், விக்னேஷ், மணிகண்டன், யோகேஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேடப்பட்டி காவல்துறையினர் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராணியம்மாள் என்ற பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.