கஞ்சா கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் தப்பிச் செல்ல முயன்ற இருவரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜா என்பதும் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரபீக் ராஜாவை கைது செய்து அவரிடம் உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி சென்ற சுபாஷ் சந்திரபோசை தீவிரமாக தேடி வருகின்றனர்.