Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் கருணாநிதி நகரில் வசிக்கும் அப்துல்லா என்பவரின் மனைவியான ஷர்மிளா பேகம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வருமானத்திற்காக அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷர்மிளா பேகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |