Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சூரியபிரகாஷை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |