Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கோட்டூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக முகமதை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |