வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர் கிராமத்தில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவருடைய வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி செம்பனார்கோவில் காவல் துறையினர் மயில்வாகனன் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் மயில்வாகனன் வீட்டில் ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 1 1/4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மயில்வாகனனை கைது செய்த கஞ்சாவையும் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.