Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பாற்று ஓடை பகுதியில் முத்தையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மட்டகடை பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன்பின் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர்  ஹரிஹரனை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |