சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வீரமணியின் தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது தோட்டத்தில் 32 கிலோ கஞ்சாவை வீரமணி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வீரமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.