பூண்டு சட்னி
தேவையான பொருட்கள் :
பூண்டு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப
புளி – எலுமிச்சை அளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, சட்னியில் கொட்டினால் சுவையான பூண்டு சட்னி தயார் !!!