தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி …..
தேவையான பொருட்கள் :
பூண்டு – 1 கப்
மணத்தக்காளி வற்றல் – 12 டீஸ்பூன்
வெல்லம் – சிறிதளவு
புளி – சிறிதளவு
வெங்காய வடகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – 2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு , காய்ந்த மிளகாய், சீரகம் , தனியா, வெந்தயம் ஆகியவற்றை போட்டு வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளிக் கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் , அரைத்த விழுது மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பூண்டை வதக்கி இதனுடன் ,மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை சேர்த்து , கொதிக்க விட்ட குழம்பில் போட்டு எண்ணெய் தெளிய இறக்கினால் சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார் !!!